பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"'பின்னுமே தேதோ' வென்று
பேசனான்.எங்க ளுக்கோ
என்னவந் தாலும் அந்தப்
பெண்ணின்மேல் விருப்பம் இல்லை;
'முன்னுள்ள உறவு போகும்’
என்பதால் முனைந்து வந்தோம்"
என்றொரு குண்டு போட்டாள்
பிள்ளையை ஈன்ற அன்னை!68

'இருப்பதை விற்றிட் டாலும்
இவர்சொல்லும் தொகைக்குச் சொத்துச்
சரிப்பட்டுப் போகா(து)' என்று
தமிழச்சி தந்தை எண்ணி
இருட்டிய வீடு போல
இருந்தனன்; பெண்ணைப் பெற்றாள்;
"ஒரே ஒரு பெண்ந மக்குத்!
தயங்காதே! 'ஊம்' கொ(டு)!" என்றாள். 69

செழியனின் நேரிற் பண்டு
சென்றபத் தினிப்பெண் போல
விழியினில் தீப்ப றக்கத்
தமிழச்சி வெளியில் வந்தாள்:
"கழியறி வுடையீர்! என்னைக்
கலந்திடா(து) அன்னை, தந்தை
மொழிந்தனர் வாக்(கு) உ மக்கு;
முடிவுவே றாகும் சொன்னேன்;70

27