பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊரிடை உள்ள அந்தக்
குளம்நோக்கி ஒருத்தி வந்தாள்;
"ஆருக்கும் இதைச்சொல் லாதே!
பாப்பாத்தி, அன்னை தந்தை
பேரினைக் கெடுத்து விட்டாள்;
பொன்னனின் பின்னே எங்கோ
ஊரைவிட்(டு) ஓடி விட்டாள்!"
என்றொரு செய்தி சொன்னாள்.82


ஊரினில் இந்தச் செய்தி
ஒருநொடிப் பொழுதில் அவ்வூர்
ஏரிக்குப் புதுநீர் போல
எட்டிற்று; தெருமு டக்கில்
சேர்ந்தனர் வீணர்; "இந்தச்
சிறுமியின் கொழுப்(பு)அ டக்க
ஓர்ந்திட வேண்டும்; இன்றேல்,
உலகமே கெடும்!" என் றார்கள்.83


'பெண்களை விருப்பம் போல
விடுவதே பிசகு! நேற்று
மண்மேட்டின் ஓர மாக
மாலையில் பொன்ன னோடு
பெண்ணவள் இருந்தாள்!' என்றும்,
'பேழையைக் கொடுத்தாள்!' என்றும்
உண்மையில் கண்ட வர்போல்
உதறினார் ஒருவர் மூட்டை!84

33