பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கடுஞ்சினம் குழிவி ழுந்த
கண்கக்கக் கிழவர் வந்தார் ;
தடியினை ஊன்றி நின்றார் ;
"தம்பிகாள்! 'பெண்க ளுக்கோ
விடுதலை வேண்டும்' என்றே
வீணர்கள் கூவு கின்றார் ;
இடங்கொடுத் திடுவோ மானால்,
இழிவுகள் மலிந்தே போகும்85


"அடிமையாய் வாழும் போதே
பெற்றோருக்(கு) அடங்கா தாரோ
தடியனாம் ஒருவ னோடு
தனிவழி போம்பெண் கட்கு
விடுதலை! விடுத லையாம் !
மிகுநன்று ! பெண்கள் நாட்டில்
கொடியவர் ; மீற விட்டால்,
குடிகெடுத் திடுவர்!" என்றார்.86


சிவப்பழம் ஒருவர் வந்தார் ;
திருமாலின் அடிமை வந்தார் ;
அவரவர் கடவுள் வாழ்த்தி,
அங்குள்ள கும்பல் நோக்கி,
"இவர்களால் ஊரி லுள்ள
எல்லோரும் கெட்டுப் போவார் ;
தவறிய ஆண்பெண் கைகால்
தறித்திட வேண்டும்!" என்றார்.87

34