பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இதற்குள்ளே அண்டை ஊரில்
இருப்பதாய் அங்கு வந்த
முதலியார் ஒருவர் சொன்னர்;
முன்கோபர் சிலர்து டித்தார்;
விதவித மான இந்த
வேடிக்கை யான கூத்தைக்
கதவோரம் கண்கொட் டாது
தமிழச்சி பார்த்தி ருந்தாள்.88.


முதியநாட் டாண்மைக் காரர்
மூத்ததன் மகனேக் கூவி,
"இதுதானா உனக்கு வேலை?
எழுந்துபோ வயலுக்(கு)!" என்றார்;
"விதிப்படி நடக்கும் யாவும்!
வீணாகக் கும்பல் கூடி
எதற்காகப் பேசு கின்றீர்?
போவீர்கள்!" என்றார்; போனார்! 89.


காசினைக் கழைக்கூத் தாடி
கைநீட்டிக் கேட்கும் போது
பேசாது போவார் போலே
வீராப்புப் பேசி நின்றார்!
ஓசைகாட் டாது நீங்கி
ஒருவர்பின் ஒருவர் போனார்!
பேசுவார்; வினைமு டிக்கப்
பின்செல்வார்; முன்போ காரே!90

35