பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 9

குப்பன் வந்தான்

காரியம் தீர்ந்த போது
கைவிடும் கயவர் போலப்
போரெலாம் ஓய்ந்த பின்பு
பட்டாளம் போய்உ ழைத்த
சீர்மிகு தமிழர்க் கெல்லாம்
தித்திப்பை நாவில் பூசி,
'ஊருக்குச் செல்க!' என்னும்

உத்தர விட்டார் ஆங்கே!
91


குப்பனும் மற்ற வர்போல்
கூடார வாழ்க்கை விட்டுத்
தொப்பி,கால் சட்டை யோடு
மேல்நாட்டுத் துரையைப் போலே
அப்பன்,அம் மையி ருக்கும்
அவன்சொந்த ஊரை நோக்கிக்
கப்பலில் வந்து சேர்ந்தான்

கைப்பெடி, படுக்கை யோடே!
92

36