பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 10

    பாப்பாத்தியின் கடிதம்

த்துன்பத்தில் ஆழ்ந்தி ருப்போர் துயரினை மாற்று கின்ற இன்முகப் பிள்ளை போலக் குப்பன்நாய் இருகால் நக்கி முன்னோடிப் பாய்ச்சல் காட்டி முழுவுடல் நெளித்த சைத்து முன்னிரு கால்கள் தூக்கி முகத்துநேர் குரைக்குந் தாவி! 100


களிப்பினில் துள்ளும் நாயைக் கண்டனன் குப்பன்; சின்ன இளிநகை உதட்டை மீறும்; இருகையால் நாயை வாரிக் களிப்போடு சேர்த்த ணைத்தான்; கழுத்தினில் சிறிய சீட்டுப் புளிபோல ஒட்டி நாயின் பூட்டினில் இருக்கக் கண்டான். 101

            40