பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"காதல! உம்மைக் காண
விழைகிறேன் கவலை மேட்டில்; ஆதலால் வருக மாலை;
அன்பரே! தென்றல் காற்றின்
மோதலும், குயிலின் பாட்டும்,
முழுமதி இரவும் நெஞ்சில்
வேதனை தருமே யன்றி, விருப்பினைத் தரவே இல்லை!102

'நரகம்ஒன்(று)
உண்(டு)அங்(கு)' என்று
நம்மவர் கூறு வார்கள்; நரகத்தைக் கண்டார் போலே நலிவெலாம் பேசு வார்கள்;
நரகத்தைக் கண்டார் இல்லை;
நாள்தொறும் உயிரை உண்ணும்
பிரிவினை உணர்ந்தி ருந்தால், நரகத்தைப் பெரிதாய்ப் பேசார்!103

'பட்டது போதும்!என்னைப்
பாழாக்க எண்ண வேண்டாம் கட்டாயம் வருக! வந்தும் கண்ணினைக் காட்டிச் செல்க பட்டாளச் செய்தி சொல்க!
பாப்பாத்தி யோடு பண்டு கொட்டம்நீர் செய்த அந்தக்
கொல்லையை மறக்க லாமோ?104

41