பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"குப்பையைச் சீய்த்துச் சீய்த்துக்
குரல்காட்டும் சேவல் நாட! எப்படிப் பிரிவை யேற்று
நீரங்குப் போர்செய் தீரோ?செப்புவீர் உமது நெஞ்சம்! திரிமருப் பிரலை மெய்யால் வெப்பத்தைக் கலைக்கு நீக்கும் வெஞ்சுரம் எனினும் மானும்!”

105

என்றஅச் சீட்டைக் கண்டான்;
இடிஇடி எனச்சி ரித்தான்; ஒன்றுமே விளங்கான் போலே
ஓயாது படித்தான் சீட்டை; நின்றவன் நடந்தான்; பின்னர்
நினைத்ததோ நின்றான்; நாயைக்
கொன்றிடக் கல்லெ டுத்தான்;
நாய்வாலைக் குழைக்கப்
போட்டான்;

1O6

முடிவிற்கு வந்தான் போல
மும்முறை தலைய சைத்தான்;
கொடிபடர்ந்(து) ஏறித் தாழ்ந்த
கொய்யாவின் கிளைஅ சைத்தான்;
படபடத்(து) இரண்டு புட்கள்
பறந்திடக் கண்டான்; "சீச்சி!
கொடியது காதல்!” என்று
கூவினான்; ஓடி னானே!

107
42