பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 11

 கவலை மேட்டில் கொலை

சப்பாத்தி இடையில் நிற்கும் தாழ்ந்தமா மரத்தின் மீது கப்பிய அன்பி னாலே இருஅணில் காயைக் கோதும்; அப்பக்கம் புதரில் கோவை அங்குள்ள செடியைச் சுற்றிச் செப்பிடும் காதற் செய்தி; சிரித்தணைந் திருக்கும் சிட்டு!108


                             பாப்பாத்தி எட்டி எட்டிப்

பார்க்கின்றாள்;கவலைமேட்டுத்தோப்பினில் குயிலி ரண்டு கிளையினில் தொத்தித் தொத்தி மாப்பிளை பெண்ணு மான வாய்திறந்(து)ஏதோ பேசும்; வேப்பனும் அரசும் காற்றில் விளையாடும் பின்னிப் பின்னி!

                          109