பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குப்பனின் வரவும்,நாளைக்
குடித்தன நினைவும் நெஞ்சில்
ஒப்பிலாக் களிப்பைத் தூண்ட
ஒருபுறம் தலையைத் தாழ்த்தி,
"இப்படி நானும் வாழ்வேன்"
என்றுபாப் பாத்தி அங்கே
செப்பிடு வித்தை காட்டும்
செடிகொடி குறைத்தி ருந்தாள் 110



பாப்பாத்தி காணா வண்ணம்
தமிழச்சி பதுங்கி வந்து
ஏய்ப்பதற் காகக் கண்ணை
இறுக்கினுள்;'குப்பா!'என்று
பாப்பாத்தி சாய்ந்தாள் கையால்
பரிவோடு பின்ன ணைந்தாள்;
வேப்பனின் மறைவி ருந்து.
வெடுக்கெனச் சிரித்தான் பொன்னன்!111



"குப்பனும் அதோபார்!" என்று
கூறினான் பொன்னன்; "கண்ணே!
தப்பாக நினைத்தி டாதே!
தனிமையில் உனது சொந்தக்
குப்பனைக் கூடிப் பின்னர்க்
கூப்பிடு; மறைந்து நாங்கள்
அப்பக்கம் இருப்போம்" என்றாள்
தமிழச்சி; அழகுப் பேழை! 112

44