பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழிவழி காதல் வெள்ளம்
மீறிட இதழ்து டிக்க
வழியினைப் பார்த்தி ருந்தாள்
பாப்பாத்தி ; வந்தான் குப்பன் ;
"பழிகாரி! எனைவஞ் சித்த
பாதகி! 'மீண்டும் உன்றன்
வழிக்(கு)எனை அடிமை யாக்க
வா!' என வரைந்திட் டாயோ?113

"நன்றடி! உனைநான் இன்று
நமனுல(கு) அனுப்பு கின்றேன் ;
ஒன்றுநீ உண்மை சொன்னால்
உயிர்தப்பும்; வேற்றா னோடு
சென்றவள் மீண்டும் என்ன
செய்வதற்(கு) எனைஅ ழைத்தாய்? கொன்(று)உனை அமைதி காண்பேன்; கூறடி உண்மை!"என்றான்114

பதிலொன்றும் பேசி டாது
பாப்பாத்தி அழுதி ருந்தாள் ;
புதரிடை இருந்து பொன்னன்
குப்பனின் முன்னர்ப் போந்து,
"பதறாதே குப்பா! இந்தப்
பாவையை உன்பொ ருட்டே
முதியவர் மணக்கா முன்னம்
மீட்டேன்;ஊர் வசவும் ஏற்றேன்!"115

45