பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்13

பாப்பாத்தி ஒப்படைக்கப்பட்டாள் ______________________________

<poem>பாப்பாத்தி கையி ரண்டும் தமிழச்சி பற்றித் தந்து, "காப்பாற்று, மதுரை வீரா! கண்ணைப்போல் இவளை; ஏழை சாப்பாட்டைத் திருடித் தின்று, சாதியை வகுத்து நம்மை ஏய்ப்பாரின் காலம் இன்னும் எத்தனை நாளோ? பார்ப்போம்!

                          122

"ஒன்றுனக்(கு) இன்னும் சொல்வேன்: உயிருள்ள வரையில் நீதான் சென்றுநான் செய்து வந்த சேரியின்தொண்டைச் செய்வாய்; என்றவர் விழிக்கின் றாரோ அந்நாளே இந்த நாட்டில் பொன்றிய உடைமை எல்லாம் பொதுவாகும் நன்னாள் ஆகும்! <poem> 123



             49