பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"உழைப்பவர் விழித்துக் கொண்டால்
ஊரினை ஏய்த்து நாளும்
பிழைப்பவர் அற்றுப் போவார் ;
பின்னேது சாதி சண்டை ?
உழைப்பவர் ஒன்று சேர்ந்தால்
தொந்தியைத் தடவி உண்டு
கொழுத்திடு பணக்கா ரர்கள்
கூட்டமும் ஓட்டம் தம்பி! 114

"எதிர்ப்புக்குக் கலங்கி டாதே ;
எவரென்ன செய்திட் டாலும்
அதற்காக வருந்தி டாதே ;
அஞ்சாதே; உலகை மாற்றப்
பொதுப்பணி எதுவா னாலும்
புரிந்திடு ; தயங்கி டாதே ;
மதுவுண்ட உலகம் உன்னை
வஞ்சிக்கும்;விழிப்பாய்;வெல்வாய்!"125

என்றனள்; சிறைக்குச் சென்றாள்
தமிழச்சி ; ஏழைப் பெண்ணாள்!
குன்றிடைப் பகலோன் இந்தக்
கொடுமையைச் சீறு வான்போல்
சென்றனன் மேற்குத் திக்கில்!
ஊரினில் இடிந்த வீட்டுப்
பொந்தினில் இந்தத் தீர்ப்பைப்
பொறுக்காமல் அலறும் ஆந்தை!126


50