பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் 14

சேரியில் தீ தீ!

சீனத்துக் கறுப்பு மேனிச்
சேரிவாழ் பருவப் பெண்கள்
மானொத்த விழியும், வட்ட
மதியொத்த முகமும் காண
வானிடை மிதந்து செல்லும்
மதியினை, வெள்ளித் தட்டைத்
தான்வந்து தடுக்கும் மேகம் !
தடுப்பதற்(கு) அதனால் ஆமோ?127

சேரியில் உள்ள ஆண்கள்
தெருவினில் கும்ப லாகப்
பாரிஅ டிக்கின் றார்கள்
பால்நிலா ஒளியில்; சற்றுத்
தூரத்தில் ஓடை மீட்டும்
முழவிற்குத் துணையாய் வீட்டின்
ஓரத்தில் பெண்கள் பாடும்
கும்மியை உற்றுக் கேளிர்!128

51