பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




           கும்மி

"சேருங்கள் சேரியில் உள்ளோரே-சற்று சிந்தித்துப் பாருங்கள் பெற்றோரே ஊருக்(கு) உழைப்பவர் 'கஞ்சி! கஞ்சி!' - என்று ஓலமிடுவது சால நன்றோ?".

                       129

"ஆண்டான் அடிமைகள் ஏய்ப்பதற்கே- நம்மை அடிமைக் குழியினில் சாய்ப்பதற்கே ! 'தீண்டாமை' என்றொரு பொய்யுஞ்சொன்னார்-மீளும் செய்தி உரைக் கின்றேன்: கேளுங்களே !"

                       130

"கட்டாயமாய்க் கல்வி கற்கவேண்டும் ! - சாதிக் கடுகளை வெட்டிச் சாய்க்கவேண்டும் ! கொட்டாவி விட்டிங்குத் தூங்குகின்ற - தொந்திச் சோம்பர்களைத் தலைகுட்ட வேண்டும் !".

                       131

"கடமையாய் ஒவ்வொரு ஆணும்பெண்ணும்-நாட்டில் கட்டாய வேலைகள் செய்யவேண்டும்! உடமை பொதுசெய்து மக்களெல்லாம் - நாட்டில் உண்டுகளித்திட வேண்டும் அய்யா !”.

          52              132