பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்(று)அந்தப் பெண்கள் பாடும்
இசையினில் நெஞ்சை விட்டு
நின்றுகொண் டிருந்தான் வீரன்
நெடுநேரம் குடிசை முன்னர் ;
குன்றொத்த வீரன் தோளைப்
பாப்பாத்தி குடிசை ஓரம்
நின்றெட்டிப் பார்த்தி ருந்தாள் ;
மழைபட்ட நிலாமு கத்தாள்!133

வீரனும் அவளைப் பார்த்தான் ;
மெதுவாக அவளி ருக்கும்
கூரையின் ஓரம் வந்தான்;
குந்தினான்; மூச்செ றிந்தான் !
"பார்த்தீரா நிலவை?" என்றாள்
பாப்பாத்தி! மதுரை வீரன்,
'ஆருக்கென் னதனால்?’ என்றான் !
அவளேனோ தலைகு னிந்தாள் ! 134


"பாவியென் னாலே பொன்னன்
படுகொலைக்(கு) ஆளும் ஆனான்;
பாவியென் னாலே, அந்தோ!
தமிழச்சி பாழே யானாள்;
பாவியென் னாலே நீரும்
பலர்பகைக்(கு) ஆளும் ஆனீர்;
பாவியேன் பிறந்தேன்?" என்றாள்
பாப்பாத்தி! வீரன் சொல்வான்: 135


53