பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"உன்னைப்போல் கோழைப் பெண்ணே
உலகினில் கண்ட தில்லை!
என்னம்மா குறைநான் செய்தேன் ?
எதற்காக இந்தப் பேச்சு?
சொன்னதை மீண்டும் என்முன்
சொல்லாதே; சொல்வாய் ஆனால்,
என்னுயிர் நீங்கும்; சேரி
இடர்ப்படும் ; வேண்டாம்!" என்றான். 136



"அப்படி யானல் உம்மை
அரித்திடும் துயர்தான் என்ன ?
செப்பிடு, வீரா!" என்றாள்
பாப்பாத்தி; திகைத்தான் வீரன் ;
எப்படி உரைப்ப(து)? என்று
கலங்கினான். இதற்குள் ளாகத்
"தப்பில்லை; என்மேல் காதல்!
சரிதானே ? சொல்வாய் !" என்றாள். 137



வீரனோ கண்க ளாலே
விடைதந்தான்; 'தீ ! தீ!' என்று
சேரியில் கூச்சல் கேட்கத்
திரும்பினான்; தெருவில் உள்ள
வீரனின் குடிசை வீடு
வெந்தது; பக்கம் உள்ள
ஓரிரு குச்சு வீடும்
உடன்வெந்து தணிந்த தந்தோ ! 138

 

54