பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 15

சேரியில் புரட்சி


"பிடிப்பட்டான் திருடன்" என்று
பின்புற மாகக் கூச்சல்
இடியென முழங்கக் கேட்டார்
ஏழைகள்; சேரி மக்கள்!
துடிதுடித்(து) அவன்மேல் பாய்ந்தார்;
தூளாக நொறுக்கு கின்ருர்!
அடியோசை சேரி எங்கும்
அதிர்ந்தது! வீரன் வந்தான்! 139



"அப்பாவே! அண்ணன் மாரே!
அடிக்காதீர்! பொறுத்தி ருங்கள்!
இப்படி விடுங்கள்! இந்த
இலுப்பையில் வரிந்து கட்டித்
தப்(பு) இவன் செய்த தற்குக்
காரணம் சாற்றக் கேட்போம்!
செப்பினல் விடுவோம்! இன்றேல்,
தீக்(கு) இரை செய்வோம்!' என்ருன். 140

5

55