பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 "உண்மையைக் கூறு கின்றேன்;
உயிர்ப்பிச்சை கொடுங்கள்!” என்று
மண்மீது கள்வன் வீழ்ந்து
வணங்கினான்; அங்குச் சூழ்ந்த பெண்களோ, "இவன்இ ரண்டு
கண்களைப் பிடுங்கிப் பின்னர் உண்மையைக் கேட்போம்!"என்று
புலிபோல உறுமி னார்கள்!

141

போருக்குப் பழங்கா லத்தே
புறப்பட்ட வீரர் போலே
ஊரார்கள் திரண்டு வந்தார்
ஒவ்வொரு தடியைத் தாங்கி!
"சேரியன் திமிர்அ டக்கித்
திரும்புவோம்!” என்று கூவிச்
சேரியை வளைத்துக் கொண்டார்! திகைத்தார்கள் சேரி மக்கள்!

142

<poem>வீரனோ கொதித்(து)எ ழுந்தான்! "மேலான எனது சொந்தச் சேரியில் வாழு வோரே! திரளுங்கள்! இனிமேல் நம்மை ஊரார்கள் வாழ வொட்டார்! உண்மையை நேரில் கண்டோம்! வீரராய் வாழ்வோம்! கிட்டும்

வெற்றிதான்! புறப்ப டுங்கள்!

143
56