பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

<poem>" சாதியை வகுத்து நம்மைப் பாழ்செய்த தடியர் கூட்டம் ஏதேனும் சிறிய நன்மை நமக்காக நினைத்த(து)உண்டா? தீதினைச் செய்வ தற்குச் சிறிதேனும் மறந்த தில்லை! ஆதலால், புறப்ப டுங்கள்! அழித்துநம் வாழ்வைக் காண்போம்! <poem> 144

"காற்றினில், மழையில்,கோடைக் காலத்தில் அவர்த மக்குச் சேற்றினில், புதரில், பாம்பு தேள்வாழு மிடத்தில் எல்லாம் சோற்றினை விளைத்துத் தந்தோம்; சோம்பர்கள் மறந்து நம்மை ஆற்றினில் புதைக்க எண்ணி வந்துள்ளார்; ஆர்த்தெ ழுங்கள்!

                          145

"உற்றாரே! உறவி னோரே! தமிழச்சி உங்கட் காக நற்றொண்டு புரிந்த தற்குச் சிறைசெய்தார்; நமது வீட்டைச் சற்றேனும் இரக்க மின்றிக் கொளுத்தினார்; தடிதாம் போடு குற்றமே அறியா நம்மைக் கொல்லவும் வந்து விட்டார்<poem>

                          146


               57