பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"நாட்டாண்மைக் காரன் இல்லை!
விரிவான நன்செய், புன்செய்,
தோட்டத்தை உடையான் இல்லை!
துாறற்குக் குடிசை அற்ற
ஓட்டாண்டி மக்கள் இல்லை!
ஒருசிலர் பசியால் சாவு
மூட்டையாய்ப் பணத்தைக் காத்துத்
தூங்காது விழிப்போன் இல்லை!

155


"ஆதலால்,ஒன்று சொல்வேன்:
அதன்படி நடக்க வேண்டும்!
தீதொன்றும் செய்தி டாமல்
இவர்களைச் சிறையில் தள்ளிப்
பாதுகாத் திருப்பீர் சின்னாள்!
பலபொருள் பொதுவாய்ச் செய்து
யாதொரு குறைவு மின்றி
யாவரும் உண்ண வேண்டும்!

156

"ஏரினை வளர்த்து நாட்டில்
எல்லோரும் உழவ ராகி
ஊரினைச் செழுமை யாக்க
ஓயாமல் உழைக்க வேண்டும்!
போர்த்தொழில் பழக வேண்டும்!
புதுப்புதுக் கைத்தொழில்கள்
வாரணி பெண்ணும் ஆணும்
மகிழ்ந்தொன்றாய்ச் செய்ய வேண்டும்!

157
            61