பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"காதலைச் செய்து மக்கள்
கடிமனை ஓம்பு கின்ற
தீதிலா வழக்கம் எங்கும்
செழித்திட வேண்டும்! மற்றும்
கோதிலாப் பெண்கள் கைம்மைக் கொடுமைக்கா ளாகி டாது
காதலைச் செய்து நாட்டில்
அறப்பண்பைக் காட்ட வேண்டும்!

161


"சூது,பொய் நிறைந்த யோக
சுத்தானந் தங்கள் இங்ஙன்
ஏதேதோ சொல்லி உங்கள்
இன்தமிழ் நலங்கெ டுப்பார்!
காதுநீர் கொடுத்தி டாதீர்!
தாய்மொழி கண்ணின் மேலாய்ப்
பாதுகாத் திடவே வேண்டும்
நம்நாடு பண்ப டற்கே!"

162


என்றனள்; சேரி வாழ்நர்,
"இச்சைபோல் நடக்கும்!" என்றார்!
மன்றினில் மாட்டைப் போலக்
கட்டுண்டு கிடந்த குப்பன்,
"சென்றதை மறந்தி டம்மா!
தெரியாது கொலைக்குற் றத்தை
உன்றன்மேல் சொன்னேன், பாவி!
ஊரார்கள் பேச்சைக் கேட்டு!

163
63