பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நாட்டினைத் திருத்த வந்த நற்றமிழ்த் தாயே! மூடன் நாட்டாண்மைக் காரன் பேச்சை நான்கேட்டேன்; கெட்டுப் போனேன்;
தீட்டிய மரத்தில் பாய்ந்தேன்;
செய்ததை மறந்தி டம்மா!
காட்டிடு கருணை இந்தக்
கயவன்மேல்; பிழைப்பேன் ஏழை! 164
    
சேரியைக் கொளுத்தச் சொன்னான்;
அதுவும்நான் செய்தேன்; பட்டேன்;
தீரநான் எண்ணி டாது
பொன்னனைக் கொன்று தீர்த்தேன்;
பார்அம்மா ஒருகண்!" என்றான்.
பாப்பாத்தி சீறி, "உன்றன்
வார்த்தைக்குப் பதிலே இல்லை;
வாய்மூடு; சிறையே!" என்றாள்.165

64