பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் 17


திருமணம்


தலையினைக் குனிந்து மீண்டும்
பாப்பாத்தி சாற்று கின்றாள்:
"மலைநிகர் தோளான் வீரன்
வாழ்விற்கே அடிமை யானேன்;
உலகீரே! என்சொல் கின்றீர்?"
என்றனள். "உங்கள் இச்சை
நிலைக்கட்டும்!” என்றார் ஊரார்.
நீள்மரம் பூஉ திர்க்கும்!166

தமிழச்சி, மதுரை வீரன் -
பாப்பாத்தி தழுவிக் கொண்டாள்!
"எமதரும் மக்காள்! வாழ்க!
இன்றேநான் இன்பம் கொண்டேன்!
அமைதியும் பெற்றேன்; பொன்னன் அழிவையும் மறந்து விட்டேன்!
இமைபோல வாழ்க நீவிர்
மக்களைக் கணக்காய் ஈன்றே!167

65