பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இன்தமிழ் எனது முச்சு! திராவிடர் எனது கண்கள்! பொன்னனே எனது நாடு! பொதுப்பணி எனது காதல்! மன்னிய பசியை நீக்க உழைப்பதே எனது வாழ்க்கை!
பின்னென்றும் வேண்டேன்; பொன்னன் பிரிவின்மாற்(று) இவையே!" என்றாள்.

168

பஞ்சாங்கம் பார்க்க வில்லை! பார்ப்பானைத் தேட வில்லை! மஞ்சள் நூல், தாலி, பீலி வாங்கவும் இல்லை! தீயைக் கொஞ்சமும் வளர்க்க வில்லை! குந்தாணி, அம்மி எல்லாம் வஞ்சகர் திணித்தார்! இந்த மன்றலை வந்து பாரீர்!

169

இணைஇணை யாக வாழை இறுக்கிய இல்லத்(து) உள்ளே மணப்பறை, மேள, தாள வாச்சியம் முழங்கும்; காட்டுக் கணக்கோலைக் கூச்சல் போன்று கருணாவும் அதிர்ந்தொ லிக்கும்; மணமக்கள் களித்தி ருந்தார் மாந்தழைப் பந்தர்க்(கு) உள்ளே!

170
66