பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலைக்கு மூன்று நான்கு
முதியவர் கல்விச் சாலை!
ஆலைகள் அடுக்(கு)அ டுக்காய்
ஆங்காங்கு நிறைந்தி ருக்கும்!
வேலையே வேதம்! ஈசன்
விளையாடும் கோவில் கல்விச்
சாலைகள்! மடங்கள் சோறு
தந்திடும் விடுதி யாகும்!175

படிக்காத மக்கள் இல்லை!
பலதொழில் வேண்டார் இல்லை!
கொடுப்பதற்(கு) இல்லை ஏழை!
கூடிவீண் காலம் போக்கும்
தடியர்கள் இல்லை அங்கே!
தாலியற் றாளும் இல்லை!
உடைமைகள் பொதுவே! எல்லா
உரிமையும் பொதுவே! வாழ்க! 176

வாழ்கவே தமிழிற் பூத்த
மதுவூட்டும் சங்க நூல்கள்!
வாழ்கவே வளமார் எங்கள்
திருவிடம்; வாழ்க மக்கள்!
வாழ்கவே என்றும் இன்ப
வளன்தரு பொதுவு டைமை!
வாழ்கவே காதல்! மக்கள்
வலிமையும் வாழ்க! வாழ்க!!177

____