பக்கம்:தமிழஞ்சலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி கொண்டிருக்கும் உயிரைப் போல -உண்மையானது தான். உங்களுடைய கிராமத்திலிருக்கின்ற ஒரு கலைஞன், யாழை மீட்டுகின்றபோது வரும் உண்மையான சிவர ஜாலங்களைப் போல; அப்பழுக்கற்றவை. கட்டாந்தரையைக் கழனியாக்க, நிலத்திலே தோய்ந்து பளபளக்கும் கார் முனையைப்போல - என்னுடைய உண்மைகள் ஒளிர்கின்றன என்று கூறினேன். அந்தப் பறவை, அப்போது தன்னுடைய கம்பீரமானத் தோற்றத்தால், கிராம மக்களைத் திரும்பிப் பார்த்தது! ஒரு குரல் எழுப்பியது! ஒரே ஒரு வினாடிதான்! மனிதன் இறப்பை வென்றுவிட்டான்! அவனுடைய உடலிலிருக்கும் உயிரணுக்கள், இனி மரணத்திற்கு அஞ்சவேண்டியதில்லை! இந்த உலகம் என்று மனிதனுக்குப் பிறப்பைக் கொடுத்ததோ - அன்றே, இறப்பையும் கொடுத்தது! ஆனால், அந்தப் பறவை, சாகா வரத்தைத் தந்துவிட்டு - விடிவதற்கு முன், சென்றுவிட்டது! அறிஞர் அண்ணா அவர்கள், அந்த வான் பறவையைப் போல் உலகுக்கு வந்தவர். நாட்கள்தோறும் செத்துக் கொண்டிருக்கின்ற ஜனநாயகம், அறிஞர் அண்ணாவால் சாகாவரம் பெற்றது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற அந்த கிராம மக்களைப்போல - அரசியலில் கூத்தடித்துக் கொண்டி 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/100&oldid=863441" இலிருந்து மீள்விக்கப்பட்டது