பக்கம்:தமிழஞ்சலி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எங்கள் கூத்தையும் - ஆட்டத்தையும் பார்க்காமல், இந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே! இதனால் யாது பயன், என்று கேட்டனர்! அதோ, அந்தப் பறவையின் வடிவத்தால் - வரவால் - தோற்றத்தால் - எல்லா உயிரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றன! அந்தப் பறவையின் பொலிவிலே, உங்கள் கண்கள் மயங்கவில்லையானால், அது உங்களுடைய விழிகளது குற்றமென்றேன்! 'அது ஒரு சோம்பல் பிடித்த பறவை' என்று, அவர்கள் கூறினார்கள். 'அது வான் வழியாக வந்த அறிவுத் துாதன், என்று நினைக்கிறாயா? என்று என்னைக் கேட்டார்கள்! எனது எண்சாண் உடம்பும் அப்போது வணக்கத்துடன் -ஆம்' என்றது! 'உண்மையை நீ உரைக்கமாட்டாய். ஒரு கிச்சிலிப் பழத்தோலை நசுக்கினாலும் கண் எரியக்கூடிய ரசமாவது கிடைக்கும்! 'உன்னைக் கசக்கிப் பிழிந்தாலும், நீ பொய்யைத் தவிர, உண்மையைப் பேசமாட்டாய் என்று உதாசினம் ஆடினர்! என்னுடைய வார்த்தைகள் உங்கள் தலைகட்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விண்மீனைப்போல் - இல்லையென்றால், உங்களுடைய உடம்பில் ஒடிக் 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/99&oldid=863694" இலிருந்து மீள்விக்கப்பட்டது