பக்கம்:தமிழஞ்சலி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி உன்னை நெருங்குவோருக்கு இல்லை, தொல்லை! தமிழ் முல்லைக் கொழிக்கின்ற மலர்க் கொல்லை நீ! பற்றி நின்ற வாழ்க்கை வேதனைகள், பறக்க வேண்டில் - பரவியிருக்கும் பஞ்சமெலாம் நகர வேண்டில் - சுற்றி நின்ற லஞ்ச லாவண்யங்கள் ஒழிய வேண்டில்: செந்தமிழின் பகையான இந்தி ஒழிய வேண்டில்: உற்றதொரு தமிழகத்தில் உயர்வே வேண்டில்: உழைப்பவர்கட்கு உயர்வளிக்கும் உன்னத வாழ்வு வேண்டில் - கொற்றமெலாம் மக்கட்கு ஆக வேண்டில்; காஞ்சி நிலக் கருவூலம் அண்ணனே - வேண்டும் நீயே! பட்டுடுத்த மாட்டாய் நீ பகட்டாக வாழ விரும்பாய் நீ! பவழச் செவ்வாய் வெற்றிலையால் சிவக்கின்ற இதழுடையோய் நீ! பாதம் நோவ, இட்டடியிட்டு ஊரூர்ஓடி, கட்டவிழ்ப் பாய் கொள்கையை நீ! விட்டொழிய மாட்டாய் குறள் வாழ்வை நீ! விலை பேச முடியாது உன்னையே நீயே! வட்ட நிலா வடிவம் கொள் குடையின் கீழ் சுட்ட செழும்பொன் சுடரவிழ்க்கும் கோன் நீ! I 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/127&oldid=863470" இலிருந்து மீள்விக்கப்பட்டது