பக்கம்:தமிழஞ்சலி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி திருப்பெயராம் உன் மூவெழுத்தைச் செப்பாராகில்: திரிவண்ணந் திறங் கொள்கைப் பேசாராகில்: இரு வண்ணக்கொடியினை ஒருகாலும் ஏந்தாராகில்: உன் பொதுக் கூட்டத் தேனமுதை உண்ணாராகில் அரசியல் நோய் கெட உம்மை அணுகாராகில்: உன் அணிவகுப்பில் முன் நிற்க உந்தி ஓடி வாராராகில் பெரு நோய்கள் அரசியலில் தொத்திச் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகிப் பிறந்தார் என்பேன்! குறளானை, இலக்கியக் குன்றானை, கற்பனை ஊர்தியானை, தத்துவக் கடலானை, துாற்றல் நஞ்சை உண்டானை, நாடகத் துறையானை, நல்ல பகுத்தறிவால் குறை தீர்ப்பானை: இன்னமுதச் சொல்லாட்சி ஈவானை, நடமாடும் இலக்கியத்தானை, மக்களவையில் மருள் நீக்கிய பேச்சால் ஐயம் தீர்த்தானை! என் உள்ளத்து உள்ளே ஒளிந்து வகை செய்யும் நிறைவோனை காலத்தின் ஏழெட்டோடு, ஈரீரெண்டாண்டையும் கடந்தானைக், காஞ்சி வாழ்ந்திட்ட பேரறிஞனை, உணராதார் செந்நெறிகளைப் போற்றாதாரே! } 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/128&oldid=863471" இலிருந்து மீள்விக்கப்பட்டது