பக்கம்:தமிழஞ்சலி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அண்ணா ஒரு தமிழ்ப் பூ மாலை! எங்கள் அண்ணனே தத்துவத்தின் தேக்கமே! எதிர்காலத்தின் ஆக்கமே! கிழக்காசிய நாடுகளைச் சுற்றி விட்டு வந்த உதய சூரியனே! கடல் கடந்த நாடுகள் தங்களைப் புகழ்ந்து, கோலாகல வரவேற்பைத் தந்தன! எதிரிகளும் ஊமையாகும்படி கலாச்சாரத் தூதுவராய் சென்று, கீர்த்திக் கொடி நாட்டிவிட்டு வந்தீர்! தலைநகரம்; உமக்கு வீர வரலாற்று விழாவெடுத்துத் தாங்கொனா மகிழ்ச்சியுற்றது! 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/130&oldid=863474" இலிருந்து மீள்விக்கப்பட்டது