பக்கம்:தமிழஞ்சலி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அது கண்டு; நாங்கள் தேனில் விழுந்த எறும்பு £567,736&TITLD! உம் தோற்றம் கண்ட இடமெலாம்; மக்கள் பூந்தோட்டமாயினர்! உம் நோக்கம் படர்ந்த இடமெலாம்: வீரத்தின் விளையாடலாகத் திகழ்ந்தது! அண்ணனே! நீர் தறுகண்மையின் தோற்றுவாய்! இனியனே! பணியனைய மலர்க்கண்ணா! பாவையர் கூட்டம் உம் பளிங்கு முகம் கண்டு, தமிழின் தலைமகனே வருக வருகவென்று பள்ளு பாடிற்றே! அன்னைக்குலம் ஆரத்தி எடுத்து அகமகிழ்ந்தனவே! அன்பு மாலைகள் ஆயிரக் கணக்கில் விழுந்தன: உமது அழகூட்டும் அனாருக்கு: சிறுவர்கள் இனிப்பு வழங்கினர் வெடித்த எரிமலையோ-பிளந்த பூகம்ப எதிரொலியோ என்று மக்கள், அண்ணா வாழ்க’ என்ற முழக்கமிட்டனர்! அந்த ஒலி முழக்கங்களைக் கேட்ட அரசியல் எதிரிகள் - மூக்கின் மீது விரல் வைத்தனர்! புருவத்தை மேலேற்றினர்; புல்லரித்த மக்கள்! உம்மை வரவேற்க - இன்முகங்கான அமுத சொற் களைக் கேட்க எமக்குள் எத்துணைப் போட்டி அண்ணா! பரி பூட்டிய தேரிலே தமிழ் மன்னவனே உம்மைப் பார்த்துப் பரவசமடைந்தோம்! 12 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/131&oldid=863475" இலிருந்து மீள்விக்கப்பட்டது