பக்கம்:தமிழஞ்சலி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி உதயசூரியன், வானவீதியிலே உல்லாச் பவனி வருவதைப் போல, காட்சியளித்தீர்! 'அடடா....வோ! அண்ணாவின் தலைமுறையிலே வாழ எடுத்த பிறவியே பிறவி என்று, எம்மை யாமே, ஏற்றிப் போற்றிக் கொண்டோமே! மண்ணிலே வேலி போடலாம்; விண்ணிலே போட முடியுமா? உடலைக் கட்டலாம்; உயிரைக் கட்ட முடியுமா? விழா என்ற பெயரிலே விண்ணிலே வேலியமைத்த வர்களைத் தமிழகம் கண்டது! உயிர், இவர்களிடம் உத்திரவு பெற்றுப் போவதைப் போல, அதையும் கட்டுகின்றோம் என்றார்கள்! நாங்கள், அத்தகையச் செயல்களை நாடவில்லை! ஏழை மக்கள், இதயம் குளிர பாராட்டுவதைக் கண்டோம்! மாடி வீடுகளிலே நின்ற மக்கள், மாலைகளை வீசியதை மனமாரக் கண்டோம்! குடில் மன்னர்கள், குது கலத்தால் பூப்பாவாடை விரித்ததைப் பூரித்துப் பார்த்தோம்! தொண்டர்கள், தங்கள் தேரோடும் வீதிகளிலே எல்லாம் மண்ணாகிக் கிடந்தார்கள்! ஏன்? உயிர் எமக்கு பெரிதல்ல; அண்ணன் அன்புதான் பெரிதென்று! 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/132&oldid=863476" இலிருந்து மீள்விக்கப்பட்டது