பக்கம்:தமிழஞ்சலி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அதனைப் பெற உயிரையும் விலையாகத் தருவோம் என்ற ஆர்வமேலிட்டால் காட்சியளித்தனர். எமது இதயவீணையை மீட்டி ஏழிசைப் பாடிவந்தோம் - ஊர்வலத்திலே! நரம்புகள் எழுப்பிய நாதமாக, நடை பாட்டு இசைத்து வந்தோம்! இதற்கெலாம் காரணம் என்ன? எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான்! எங்கள் வாழ்வும் வளமும், அறிஞர் அண்ணாவே என்ற எண்ணம் தான்! இதைவிட யாம் பெறும்பேறு; இப்பிறவியில் இல்லை என்பதை உணர்ந்த காரணத்தால்தான் அண்ணா! கடிக்க நனி சொட்டும் கரும்பு! மோப்ப மணக்கின்ற மலர்! கேட்கப் பரவி வரும் இசை! நோக்கம் எழிலியும் காட்சி! உணர சுகந்தரும் தென்னல்! எண்ண எண்ண இனிமை தரும் அறிவு! இத்தனையும் வென்ற ஒரு பெருந்தலைவர் நீள்தானே, அண்ணா! மாணிக்க விளக்கின் மரகதத் தீபமாக இருந்தது எங்கள் வரவேற்பைத் தாங்கள் ஏற்றபோது! 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/133&oldid=863477" இலிருந்து மீள்விக்கப்பட்டது