பக்கம்:தமிழஞ்சலி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பூவை அனைத்துத் தாதென்ற உள்ளங்களைப் பறித்துக் கொண்டு; காலமெனும் நதியிலே நீதவழ்கிறாய்! காலமெனும் நதி வற்றாது ஒடும் ஒரு ஜீவ ஆறு. அந்த ஆறு எத்தனையோ வரலாறுகளைச் சுமந்திருக்கிறது. எத்தனை யெத்தனையோ வரலாறுகட்கு கல்லறையும் கட்டியிருக்கிறது! சாக்ரடீசுக்கு நஞ்சு தந்து சாகடித்தது யார்? ஜோன் ஆஃப் ஆர்க்கை எரியவிட்டது யார்? ஏசுவைத் துடிக்கத் துடிக்க அறைய விட்டது எது? காந்தியாரின் சாகாப் புகழ், புத்தனின் அறப் புனிதம், இந்த வரலாறுகளைக் கணக்குத் தவறாமல் எழுதி முடிப்பதும் இந்தக் காலம் அல்லவா? அந்தக் கால நதியிலேதான் பிறந்தவனும் நீராடுகிறான். இறந்தவன் எலும்புகளும் கரைக்கப்படுகின்றன: மலர்களை மலர வைப்பதும், மடிய வைப்பதும் அதே காலம்தானே! புதுமணத் தம்பதிகளை நீராட அனுமதிப்பதும், புருஷனை இழந்தவர்களின் தாலியை ஏற்றுக் கொள்வதும், இதே காலநதி தான். இதைப் பல இடங்களிலே பார்த்திருக்கிறேன் தென்றலே! அது, காலத்திற்கேற்ற நிலைமைகளைத் தழுவிக் காலக் கர்த்தாவாக நடமாடுகிறது.

  1. 34
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/144&oldid=863489" இலிருந்து மீள்விக்கப்பட்டது