பக்கம்:தமிழஞ்சலி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி கடல் மீது மட்டும் நீ விளையாடவில்லை, கனவின் மீதும் விளையாடுகிறாய்! ஊழித்தியே, கடையனலே பரிதியே! உன்னுடைய குதிரைகள் எங்கே? நீ பனிப் பகைவன். உன்னுடைய புரவிகள் பனியிலே புரள்கின்றனவா? நீ சுடர், அதனால்தான் சுடுகிறாயா? நீ பதங்கன். அதனால்தான் என்னைப் பதப்படுத் &єтпшт? நீ இருள்வலி என் இருளை வீழ்த்தினாயா? மார்த்தாண்டன் நீ உன்னைத் தாண்டி யாரும் வரமுடியாது. என்னுழ் நீ ஆகவே, நீ என்றும் இருப்பவன்! அருணன் நீ, அரும்பைத் தொடர்ந்து ஆகாயம் வரை விரிந்து இருக்கிறாய்! ஆதவன் நீ உன்னுடைய ஆதரவு எமது உரிமைக்குத் தேவை! நீ மித்திரன். எனவே நீ என் உறவு! நீ ஆயிரம் சோதி, எனவே உனக்கு ஆயிரம்பகை உண்டு! நீ தரணி இயல்பாகவே கோடைப் பரணி உன்னி டத்திலே உண்டு! நீ செங்கதிர், ஆகவேதான் நீ காலையிலே மென்மையாக இருக்கின்றாய்! 15 i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/161&oldid=863508" இலிருந்து மீள்விக்கப்பட்டது