பக்கம்:தமிழஞ்சலி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி குறளில் அடங்கும் ஒப்பற்ற பொருளைப்போல், சூரியன் அந்திக்குள் அடங்கினான். விளக்க முடியாத துன்பத்தால் இருண்டு போயிருக் கின்ற விதவையின் உள்ளம்போல் - உலகின் மேல் இருள் கவிழ்ந்தது. வானம் அப்போது நிர்மலமாக இருந்தது. காலமறிந்து தாக்குவதற்காகப் படை வீரர்கள் பதுங்கிப் பதுங்கி, எதிரியின் எல்லையை எட்டிப் பார்ப்பதுபோல் - விண்மீன்கள், ஒவ்வொன்றாகத் தலையைக் காட்டின. அவற்றின் கண்கள் சிவந்திருந்தன. நெடுந்துாரத்தில் செல்லுகின்ற தீவட்டிக் கொள்ளைகாரர்களைப்போல, சில நேரத்தில், விண்மீன்க்ள தெரிய ஆரம்பித்தன. ஒரு மனிதனுடைய வாழ்நாட்கள், பறக்கின்ற பறவையைப் போல செல்லுகின்றது என்றால் - அந்தப் பறவைகள் கூடுகட்டுகிற இடம், விண்மீன்கள் மீதுதானா? என்னுடைய மன உளைச்சலிலிருந்து, நான் விடுதலை பெறுவதற்காக, என் கையில் ஒரு விளக்கு இல்லையே - என்று, இயற்கையெனும் கலைஞனைப் பார்த்துக் கேட்டேன். அவன் தன் நெற்றியைச் சுருக்கிக், கால்களை அகல விரித்து, உன்னை நான் இருட்டுக்கு அழைத்துச் செல்லவா? ஒளி தரும் சூரியனைப் பகலிலே தந்தேன்? நீ தாமரைப் பூத்த தடாகத்தில் குளித்துவிட்டு - மல்லிகை மனக்கும் பூங்காவில் ஒய்வெடுத்தபின் - 166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/176&oldid=863524" இலிருந்து மீள்விக்கப்பட்டது