பக்கம்:தமிழஞ்சலி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி வண்டுகள் மொண்டு வைத்த தேனை வாரி உண்ட பின் - உன் வழிப் பயணத்தை என்னிடத்தில் முடித்துக்கொள் என்று நான் சொல்லவில்லையா? மறைபட்ட பொருளை வெளியாக்கி - சிறைபட்டச் சீவனை விடுதலை செய்து - முட்டாள் தனத்தை அறிவு மயமாக்கி - குழந்தையை வாலிபனாக்கி வாலிபத்தை வயதாக்கிமேலை கீழாக்கி - கீழை மேலாக்கிசகதியிலே நீ விழாமல் இருப்பதற்காக, உனக்கென ஒர் ஒளியை உருவாக்கியவன் நான். அந்த ஒளி - வானத்தில் நிலவாகவும் - பூமியில் உன் மன அறிவாகவும் இருப்பதை நீ உணரவில்லையா? நீ கேட்ட பிறகு உன் கோளுக்கு இணங்கி, அதோ அந்த வானவட்டத்தை, உனக்குப் பரிசளிக்கிறேன். அதன் பெயர் நிலவு. அந்த நிலா, ஒப்பற்ற ஒளிப் பிழம்பு. தெளிவுக்கு இலக்கணம் அது. இந்த ஒளியால் அதனைத் தீண்டியவர்கள், ஒரு போதும் இருளில் இருந்ததில்லை. காணாமல் போன தனது சீவனைத் தேடிக் கொண்டு அலைபவன்கூட, அந்த நிலவொளியில், காட்டோரத்தில், 167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/177&oldid=863525" இலிருந்து மீள்விக்கப்பட்டது