பக்கம்:தமிழஞ்சலி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அது கவிதையிலிருந்தால் - அதனைக் கவித்துவம் என்று, பாராட்டுவோம். சித்தாந்தத்தில் அது இருந்தால், அதைச் சித்தர் பட்டியலிலே சேர்ப்போம். அது கணிதத்தில் இருந்தால், எண்களின் மாயத்தில் சேர்ப்போம். இலக்கியத்தில் இருந்தால், அதனைப் புலமையிலே சேர்ப்போம். அது வானத்தில் இருப்பதனால் நிலவு என் கிறோம்.அது அரசியலிலும் இப்போது வந்திருக்கிறது. ஆதலால், அதனை அறிஞர் என்று அழைப்போம். இரக்கமற்ற மனிதக் கண்கள், அந்த நிலவைச் சபிக்கின்ற நேரத்தில், அது தன் குளிர்ச்சியைவிட்டுக் கொதிப்படையவில்லை. ஊமைக்கும் அதியற்புதமான கற்பனையைக் கொடுக்கக் கூடிய சக்தி, நிலா என்று, கவிஞர்கள் கூறுகிறார்கள். உடம்பெல்லாம் தொழு நோய்ப் பற்றிய ஒருவன், அந்த நிலா ஒளியில் செல்கிற நேரத்தில், அவன் பாதி குணமாகி விடுகிறான். இல்லையென்றால், அவன் உடல் பூராவும் தங்கமாய், மின்னுவதைப் பார்க்கிறோம். மண்ணிலே புதையுண்ட தங்கத்தை வாரிக்கொள்வதைப் போல், விண்ணிலே புதைந்த நிலவைக் கண்களால் வாரிக் கொள்கிறோம்-கருத்தால் நிரப்பிக் கொள்கிறோம். | 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/180&oldid=863529" இலிருந்து மீள்விக்கப்பட்டது