பக்கம்:தமிழஞ்சலி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி பேரறிஞர்களை நிலவுக்கு ஒப்பிடுவதின் மூலம், நம்முடைய ஆசையைக் காட்டிக் கொள்கிறோம் என்று நினைக்கக் கூடாது. உயர்ந்த இடத்தில், ஒருவன் சென்றால், அவன் சூரியனைப் போல் எரிச்சலாக இருப்பான். ஆனால், பண்பட்ட அறிஞர்கள் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், எரிச்சலாய் இருக்கமாட்டார்கள். உயர்ந்த இடத்தில் எரிச்சலை ஊட்டாமல் இருப்பது நிலவு: ஆகவே அண்ணா அவர்கள் ஒரு நிலா. இப்படி, வாழ்க்கையின் தத்துவத்திற்கு ஒட்டி வருகின்ற ஒரு நிலா, பலருடைய இரகசியத்தை அறிந்ததாகும். கோடி மக்களின் அனுபவத்தை உணர்ந்ததாகும். அதன் அறிவின் ஆழத்தை, அவனுள் இறங்கி யாரும் காணவில்லை. அதன் விரிவில், யாரும் குடித்தனம் செய்வில்லை. அதனுடைய செறிவில், யாரும் அணுவாகவில்லை. ஆனால், அதன் ஒளிமட்டும் ஊருக்குப் பரவுகிறது. அதன் வட்ட வடிவில் அறிவின் சிதறல்கள். அதன் மவுனத்தில், ஞானத்தின் தெளிவு. தன்னிடத்திலே இருக்கின்ற பெரிய சக்தியினால், அந்த நிலா கர்வமடைவதில்லை. தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி, அது நெடுநேரம் பேசுவதில்லை. 17]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/181&oldid=863530" இலிருந்து மீள்விக்கப்பட்டது