பக்கம்:தமிழஞ்சலி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எத்தனையோ படைப்புக்களைப் படைத்த நீ உனது கைக்குக் கிடைத்தவன்தானா? என்னைக் குமிழியாகப் படைத்தவளே! நீரின் மீது ஒடமாக ஒட்டி விட்டவளே! தாய்ப் பாசம் என்னைத் தள்ள, உன் மடியை நோக்கி வர வேண்டிய என்னைக் கற்களிலே மோதி உடையவர் படைத்தாய்? எனது தோற்றத்தால், நீ பெறுகின்ற மகிழ்ச்சிதான் என்னம்மா? அலையின் அழகில் ஆனந்தக் கூத்தாடும், தென்றல் தேரை, நீ ஒட்டிவந்த நாளில் - உனது தேரூறும் பாதையெலாம் நான் மணலாக இருந்தேன்! அருள் பெற்ற காரணத்தால், எனக்கு நீ அருளிய உருவம், குமிழியா அம்மா! நிதானத்தைத் தவறாத மனிதன், நித்திரையில் நல்ல கனவைக் காண்கிறான்! அவனின் ஆசைகள், பகலிலே பூத்துக் குலுங்குகின்றன: தாயே! என்ன கனவு நான் காண்பேன்! பயங்கரத்தின் தலை வாயிலிலே நான், பொடிப் பொடியாவதைப் போல, தினம் தினம் காண்கின்றேன். என் வாழ்நாள். மக்கிப் போன கயிற்றைப் போல, இழை உரிந்து கிடக்கின்றது! ஒரு காலத்தில் இது ஆனையைக் கட்டி இழுத்தது! இப்போது, ஒர் ஆட்டைக் கூட கட்ட முடியாமல். } 75.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/185&oldid=863534" இலிருந்து மீள்விக்கப்பட்டது