பக்கம்:தமிழஞ்சலி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கைைணி இந்த லட்சணத்தில், எனக்கு வண்ணம் தோய்ந்த நீர்க் குமிழி உருவமா அம்மா! அதோ, கரும்இருளில் பேய்க்காற்று என்னை அடித்துச் செல்கின்றது: வழி காட்ட ஒரு மின்மினிப் பூச்சி கூட என்னுடன் வரவில்லையே! பனித்துளிகளை உண்டு வாழும் வெட்டுக்கிளியின் இறக்கைப் படபடப்பைத் தவிர, வேறு குரலேதும் கேட்கவில்லையே! நத்தையின் உதடுகள், கிளிஞ்சல்க்ள் மேல் போகும் போது ஏற்படுகின்ற சப்தத்தைத் தவிர, நான் எதையும் கேட்க முடியவில்லையே! கனவு கண்டு எழுந்த புறாக்களின் முனகலைத் தவிர -வேறு எந்த அசரீரியும் கேட்கவில்லையே! தொட்டிலில் நீ பாடிய பாட்டை, நான் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கின்றேன்! அவை, கவனத்தின் கூடாரத்திற்கு வரவே, ஆண்டுகள் பல பிடிக்கும் போல் இருக்கிறதே! உனது இனிமையான அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள - என் செவிக் கதவுகள், திறந்தே இருக்கின்றன. அவற்றில், அவலத்தின் ஆரவாரத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அம்மா! இதோ நான் உடற்குன்றி, இப்போது இரண்டு கற்களுக்கிடையே, நுழைகின்றேன். } 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/187&oldid=863536" இலிருந்து மீள்விக்கப்பட்டது