பக்கம்:தமிழஞ்சலி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அக்கற்கள், எதேச்சாதிகாரத்தின் பிடியைப் போல், இறுக்கமாக என்னைப் பிடிக்கின்றன. எனது சுதந்திர உணர்ச்சிக்கு, அவை விலங்குகளைப் பூட்டின போல் தோன்றுகிறது. உண்மையிலேயே, நீ என்னைச் சுதந்திரமாகப் படைத்திருந்தால், பலி பீடத்தின் முன்னாலே நிற்க வைத்திருக்கும் ஆட்டைப் போல - ஏன் - என் உரிமை, பெருமூச்சு விடவேண்டும்? பலாப் பழத்தின் முட்களைப் போல, சொறி பிடித்த கற்களுக்கு இடையே, இப்போது எனது உடல், தேய்ந்து தேய்ந்து, நழுவி நழுவிச் செல்கின்றது! இருபதாண்டு காலக் கொடுங்கோல் ஆட்சி ஒன்றிட மிருந்து தப்பித்த மக்களைப்போல, அக்கற்களை விட்டு ஒருவாறு பிழைத்து நகர்ந்து வந்து விட்டேன். திடீரென்று உயரமானதோர் இடத்திலே இருந்து - தட தடவென்று சரிந்து, கீழே விழுந்தேன். ஒட்டகத்தின் மீதிருந்த அரசனொருவன், ஒட்டாண்டி யான போது எப்படித் தள்ளாடித் தள்ளாடி நடப்பானோ, அப்படி நடுங்கிக் கொண்டே இப்போது செல்கிறேன். ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட் டங்களில், அதன் தொண்டர்களது உடம்பு, பட்ட அடி உதைகளால் படுகாயங்களாவதைப் போல், எனது உடம்பு கீழே விழுந்தபோது படுகாயங்களாகி விட்டன. 1 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/188&oldid=863537" இலிருந்து மீள்விக்கப்பட்டது