பக்கம்:தமிழஞ்சலி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-என்.வி-கலைமணி இருந்தாலும், எனது உடலை அந்தச் சரிவுகளால், அழிக்க முடியவில்லை - தாயே! உனது சாகாவரம் பெற்ற இலக்கிய ஏடுகளில் ஒன்று, எனக்குக் கவனம் வருகிறது அம்மா! சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன், "செந்நாய் சீறினாலும் - சிறுத்தைகள் உறுமினாலும் - கலங்கத் தேவையில்லை" என்பதே அது. எனது பாதை, பள்ளங்களும் - மேடுகளும் நிறைந்தவை என்றாலும், விழும்போதுதான், மேடும் பள்ளமும் தெரிகிறது! என் உடலின் மீதிருக்கும் வண்ணத்தைப் பார்த்து - நீ ரசிக்கிறாயா அம்மா! அவற்றை நீ தானே, துரிகையால் தொட்டு எழுதினாய்? அளவிட முடியாத உயரத்தைக் காட்டுகின்ற வண்ணம் - நீலம், அந்த நீலத்திற்கு, நீ கொடுத்த விமரிசனம் - 'திருக்குறள் அல்லவா? அதனால் என் உடல் முழுவதும் எழுதி வரைந்தாய்! அதன் ரசனையில் நீ இருக்கும் போதே, நான் கீழ் - மேலாகவே, வாழ்க்கையை மாற்றிச் செல்கிறேனே! தாயே! தர்மத்தின் திக்கில் இருப்பவளே! நீதியின் நிழலை விரவும் தருவே! உனது கம்பீரமான தோற்றத்தை, நான் போகின்ற ஆற்றின் பாதையில், கண்டேன்! மெய்சிலிர்த்தேன்! | 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/189&oldid=863538" இலிருந்து மீள்விக்கப்பட்டது