பக்கம்:தமிழஞ்சலி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி ஒப்பற்ற ஒருவனுக்கு இருக்கும் துப்புற்ற முகமே! கார் பார்த்து ஆடுகின்ற கன்னித் தமிழ் மயிலே! சீர் பார்த்து அடுக்கி வைத்த செம்மாந்த வெண்பாவே! போர் பார்த்த முகமே யார் பார்த்தும் கோணாத அகமே! தமிழ்ப் பதியே! ஆனந்தத் திதியே! தமிழர்க்கு கதியே! தமிழகத்தின் நிதியே! சாற்றவனே - தமிழ் சாற்றவனே! வீற்றவனே - உள்ளில் வீற்றவனே! ஏற்றவனே - நாட்டுக்கு, ஏற்றவனே! கடும்புலமை சொல்லடுகிக்கி, விடுவார்த்தை வேகத்தை - மீறி நின்ற வேகமே! நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற - உச்சிக்குமேல் நின்ற, தமிழ் நிலவே! கடும் கோபம் தழல் எரியா - கீழ்வானில் உதித்த பரிதியின் உருவே! மூளைக்கு அலங்காரமிட்டு - மனிதச் சாலையிலே வருகின்ற வடிவா நீ? இல்லை இல்லை! மூளைக்கு வேர் நீ வேரோடித் திளைக்கின்ற நீர் நீ! 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/214&oldid=863566" இலிருந்து மீள்விக்கப்பட்டது