பக்கம்:தமிழஞ்சலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி கத்தாதே என்று வளர்ந்த கடா கேட்கிறது. ஜீவன் மழலைமொழி பேசும்போது சப்தம் இப்படித் தான் வருமென்று நீர்வீழ்ச்சி சொல்கிறது. இலக்கண அமைதியே இல்லையென்று கடா கேட் கிறது. குழந்தை இலக்கியத்திற்கு என்னைப்போன்ற தாய்தான் இலக்கணம் - என்று நீர்வீழ்ச்சி கூறுகிறது. நீர்வீழ்ச்சியின் இந்த நேர்த்தியான உரையைக் கேட்ட முதல் மூத்த கவிஞன் - வளரும் கவிஞனை வாழ்த்த ஆரம்பித்தான். அதோ முட்டையைப் பிளந்த பறவைப் பிஞ்சு ஒன்று, முதன் முதலாக நீர்வீழ்ச்சியைப் பார்க்கிறது. அதன் மொழியில் தாயைப் பார்த்து: "இது என்ன? என்று கேட்கிறது. அது ஒரு பாய்: என்று தாய் சொல்கிறது. பாயவில்லையே என்று குஞ்சு கேட்கிறது. கீழே பாய்கிறது என்று கூறியது தாய்! கீழே பாய்வது, ஏன் மேலே பாயவில்லை என்று கேட்டது குஞ்சு! கீழே இருக்கும்போது பாயலாம்! வளர்ந்து மேலே போகும்போது பாயக்கூடாது. அன்பின் மடியில் விழவேண்டும். இதுதான் நீர்வீழ்ச்சியின் இலக்கணம் என்றது தாய். 2}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/31&oldid=863585" இலிருந்து மீள்விக்கப்பட்டது