பக்கம்:தமிழஞ்சலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அண்ணாவும் அப்படித்தான் பெரியாரோடு இருக்கும் போது சிங்கமெனப் பாய்ந்தார். வளர்ந்து அவர் மேலே போனபோது, எல்லாருடைய மடியிலும் வீழ்ந்தார். நீர்வீழ்ச்சிக்கு நடுவிலே புகுந்தாலென்ன என்று கேட்டது குஞ்சு. 'மரணம் உன்னை விழுங்கும் என்றது தாய். அண்ணாவின் பேச்சு வீழ்ச்சிக்கு நடுவில் புகுந்தவர்கள் - மரணம்பட்ட வாய்போல மூடிக்கிடந்தார்கள். நீர்வீழ்ச்சியின் தண்ணிரை: என் அலகில் - கொஞ்சம் தானே எடுக்க முடிகிறது என்றது குஞ்சு. அதையே உன்னால் ஜீரணம் செய்ய முடியுமா? என்றது தாய், மொத்தத்தையும் குடித்தால்தான் ஜீரணம் செய்ததாகப் பொருளா? கொஞ்சம் குடித்தால் போதாதா என்றது குஞ்சு! அண்ணாவைக் கொஞ்சம் குடித்தவன் - அதிகம் குடித்தவனாக நினைக்கிறான். அதிகம் குடிக்க நினைத்தவன் - குடிக்காமலேயே வியந்து நின்றான். நீர்வீழ்ச்சி எங்கே இருந்து வருகிறது அம்மா என்று குஞ்சு கேட்டது. தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது! 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/32&oldid=863586" இலிருந்து மீள்விக்கப்பட்டது