பக்கம்:தமிழஞ்சலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அந்த செம்புக்குள் எட்டுக் குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன. தெய்வம் குழந்தையாக இருக்கும்போது, செம்பைப் போட்டு உடைத்தது. உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே, அவைதான் நீர்வீழ்ச்சி! அப்படியானால் அந்தத் தெய்வத்தை எங்கே கானலாம்? அன்பகத்திலும் அறிவகத்திலும் அதைப் பார்க்கலாம். நீர்வீழ்ச்சியை எப்போதாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று குஞ்சு கேட்டது. கண்மூடிக் கடைசியாகப் போகும்போது நான் அதைப் பார்த்தேன் - என்றது தாய்! விழி திறந்து அது உலா வரும்போது பார்க்க வில்லையா? என்றது குஞ்சு. அதன் பேச்சிலே மயங்கியதால், நான் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை, பார்க்கவில்லை என்றது தாய், கரடு முரடான பாறை வழவழப்பான பிறகு நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கேட்டது. நீழ்வீழ்ச்சியே! எப்படி என்னை வழவழப்பாக ஆக்கினாய்! முரட்டுத்தனத்தை மிருதுவாக்குவதும், மீறி வருவதைத் தாக்காமல் தாவுவதும் - எனது வழக்கம் என்றது. 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/33&oldid=863587" இலிருந்து மீள்விக்கப்பட்டது