பக்கம்:தமிழஞ்சலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அண்ணா ஒரு வானவில்! நீலவான் நிர்மலமாக இருந்தது! முகிற் கூட்டங்கள் திடீரென்று அதை மூடிக்கொண்டன! மின்னல் கீற்றுகள் மேகத்தின் முதுகில் வரி வரியாகச் சூடுகள் போட்டன! மேகங்கள் துடித்து அலறின: கண்ணிர்த் துளிகளை உகுத்து உகுத்து: அவை கருத்து விட்டன: நடுவானத்திலே நடைபெறும் - இந்த ரணகளப் போரைக் கண்டு, சூரியன் அச்சப்பட்டது! ஒருவனை மற்றொருவன் உலகத்தில் அடித்துக் கொண்டு சாவதைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிப்பதைப் போல அருணனும் இதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/38&oldid=863592" இலிருந்து மீள்விக்கப்பட்டது