பக்கம்:தமிழஞ்சலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி கன்னல் வாழ்க்கையிலே கசப்பைத் தான் கண்டனர். மின்னல் வாழ்வென உன்னைப் போல, மக்களும் நினைத்து எண்ணிக் கிடந்தனர். நைந்தனர் வாழ வழியின்றி! அந்நிலை அகற்றிட மங்கல தொணி எழுப்பி; மஞ்சள் கொடி காட்டினார் ஒருவர். 'பொங்கிடும் இன்பம் எங்கும் தங்குக என்று சங்கே முழங்கு என்று சாற்றினார். விழி பெற்றனர் மக்கள்; அவர் தம் அறிவுரைகளைக் கேட்டு: வழிபற்றி நடந்தனர். 'நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ! என்று! குழி விழுந்த கன்னத்தில் சிரிப்புக் குமிழுடைத்துச் சிரிக்கத் தொடங்கினர் மக்கள். வாழ்க்கை சிரித்தது! மனிதன் சிரித்தான்! தமிழகம் சிரித்தது! தலை நிமிர்ந்து நடந்தது! தன்மானம் பெற்றது தமிழ் நாடெனப் பெயர் பெற்றது! இத்துணைக்கும் காரணமாய் இருக்கும் மஞ்சளினை மாயையெனப் புகன்றாயே சிறுவனே! மறுமுறையும் இவ்வாறு ஆய்ந்துரைக்காதே என்று மங்கலமாய் கூறியது மஞ்சள் சாமந்தி மலர்! சாமந்தி மலர் இவ்வாறு சாற்றிய உரை கேட்டேன். தெளிவடைந்த நான் சிறிது தூரத்திற்கப்பால் சென்றேன். 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/61&oldid=863618" இலிருந்து மீள்விக்கப்பட்டது